பிபிஜி பிசியோதெரபி கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ‘ஆடுகளம் 2.0′ மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில்  தொடங்கியது.

போட்டியை பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தொடங்கி வைத்தார். தாளாளர்  சாந்தி தங்கவேலு, துணைத் தலைவர் அக்சய் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

PPG 2

சிறப்பு விருந்தினராக அஸ்வின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வின் கலந்துகொண்டார். பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் சிவகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

ஜனவரி 25 வரை மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

PPG 3

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவப் பிரிவுகள் மட்டுமின்றி, பிசியோதெரபி, நர்சிங், பார்மசி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 3,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முதல் நாள் போட்டியில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.