கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் நல மையம் சார்பில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (09.01.2025) வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் செயலரும் இயக்குநருமான சி.ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் செண்பகலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தி இந்து குழுமத்தின் பொது மேலாளர் ராஜ்குமார் துரைராஜ் கெளரவ விருந்தினராக பங்கேற்றார்.

2 10 scaled

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சங்கீதா, சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுமங்கலா, மாணவர் பேரவைத் தலைவர் தோம்னிக் லித்வினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடையணிந்து உற்சாகமாக பங்கேற்றனர்.

நிகழ்வின் இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் நாகராஜா தலைமையில் தேடி வந்த வரமே, நாடி வந்த காதலே என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

3 8