கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்த கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி போன்ற நிகழ்வுகளுடன், மண்பானையில் பொங்கல் வைத்து, முளைப்பாரி எடுத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பம்சமாக கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்தும் மாணவிகள் சேலை அணிந்தும் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

