கோவை பொள்ளாச்சியில் பத்தாவது முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இன்று காலை துவங்கிய நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந் நிலையில் இன்று காலை நிகழ்ச்சி நடைபெறும் இடமான ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து ஆறாம் எண் கொண்ட யானை வடிவிலான பிரம்மாண்ட ராட்சத பலூனில் பைலட் என அழைக்கப்படும் ராட்சத பலூன் இயக்கிகளான வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பைலட்டுகளுடன் இரண்டு பெண் குழந்தைகள் பயணம். செய்தனர். பொள்ளாச்சியில் ராட்சத பலூனில் பயணம் செய்த சிறுமிகள் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து இருக்கவில்லை.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட ராட்சத பலூன் கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் தரை இறங்கியதாக தெரிகிறது. நெல் வயல்வெளியில் திடீரென ராட்சத பலூன் தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இது சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
இரண்டு சிறுமிகளுடன் சென்ற ராட்சத பலூன் கேரள மாநிலப் பகுதியில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சியில் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேள்வி எழுப்பிய போது அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பைலட்டுகளின் விதிமுறைகளுக்கு ஏற்றபடி முறையாக செய்யப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.