மேட்டுப்பாளையம் மகாஜனா மேல்நிலைப்பள்ளியின் சார்பாக, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கலந்துகொண்டு பேசுகையில், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவைரும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்த கல்வி ஆண்டு மகாஜனா பள்ளி பொறுப்பேற்று அனைத்து விளையாட்டுகளையும் நடத்தி முடித்துள்ளனர். இந்த பாராட்டுவிழா உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றேன். இனி வரும் காலங்களில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
விழாவில் மகாஜனா மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் சரசுவதி, நிர்வாக இயக்குனர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

