சமூக நீதி நாளான தந்தை பெரியார் 147வது பிறந்தநாளை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் கோட்டையம் மாவட்ட ஆட்சியர் சேத்தன் குமார் மீனா பெரியாரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அருகில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீஜித், கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, வருவாய் கோட்டாட்சியர் தீபா கேபி, வைக்கம் நகராட்சி தலைவர் பிரீத்தா ராஜேஷ், வட்டாட்சியர் விபின் பாஸ்கரன், நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.
