கோவையில் பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலம், வார்டு எண்.33க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், முதற்கட்டமாக உள்விளையாட்டு வளாகம் அமைக்கும் வகையில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில், சுமார் 1.10 ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில், உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண் ஆகியோர்களுக்கான தனித்தனியான இருப்பு அறைகள் மற்றும் கழிப்பறைகள், யோகா மையம், முதலுதவி சிகிச்சை மையம், பார்வையாளர்கள் அமரும் பகுதி, உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான விளையாட்டு வளாகம் அமைய உள்ளது.
விரைவாக பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
