கோவை, ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள கிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஜூலை 29ஆம் தேதியன்று நடைபெற்றது.

இதில் கல்லூரியின் தலைவரான கோவை மறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர் லெ.தாமஸ் அக்குவினாஸ் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கல்வி கற்கவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தும், பெற்றோர்களை கவனிப்பது மாணவர்களின் கடமை என்பதையும் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி தாளாளர் தந்தை பேரருட் ஜான்.ஜோசப் ஸ்தனிஸ் பெற்றோர்கள் தங்களுடைய நிலையைக் காட்டிலும் தங்களது மகனும், மகளும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கல்லூரியில் சேர்த்துள்ளார்கள். அதற்கான வழிகாட்டியாக எங்கள் கல்லூரி திகழும் என்று கூறினார்.

பின்னர் கல்லூரியில் படித்து சமுதாயத்தில் உயரிய நிலையை அடைந்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அந்தோணி பெர்னாண்டஸ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.