கோயம்புத்தூர் தெற்கு மண்டலம், வார்டு எண். 94க்குட்பட்ட கல்லுக்குழி வீதியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.21.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

2 11

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.