கோவை மாநகர் மாவட்ட திமுக, மாநகர் மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் மற்றும் கோவை மாநகராட்சி 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பன்னீர்செல்வம் அலுவலகத்தில், ஏழை மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில் இலவச கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.

இந்த மையத்தின் திறப்பை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் திறந்து வைத்து, நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி வாழ்த்துத் தெரிவித்தார்.

1 81

இந்நிகழ்வில், சிங்காநல்லூர் பகுதி -1 திமுக செயலாளர் எஸ். எம். சாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், பகுதி துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், அவைத் தலைவர் என்.டி. சின்னச்சாமி, வட்டக் கழகச் செயலாளர்கள் சண்முகம், சுரேஷ்குமார், இளங்கோவன், ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் சுமித்ரா தீபக், மாநகர் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கனிமொழி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.