வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. வி.எல்.பி.ஜெ அறக்கட்டளை தலைவர் சூர்ய குமார் தலைமையுரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் கலைவாணி வாழ்த்துரை வழங்கினார். கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் பிருந்தா சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கண்ணூர் பல்கலைக்கழக முன்னாள் கட்டுப்பாட்டாளர் வின்சென்ட் கலந்துகொண்டார். பாலக்காடு கே.பி.எஸ் அகாடமியின் நிறுவன தலைவர் ஸ்ரீஜித் நாயர், கோகுலம் சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் துணைப் பொது மேலாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் மாணவிகள் பலரும் கசவு புடவையிலும், மாணவர்கள் வேட்டியிலும் வந்திருந்தனர். வேடிக்கை நிறைந்த போட்டிகள் நடைபெற்றன. சிங்கார மேளத்தின் தாளத்திற்கு மாணவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

