ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
கல்லூரியின் முதல்வர் சத்யா தலைமை வகித்து தொடங்கி வைக்க, ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைக்கட்டியது. மாணவ, மாணவிகள், கேரள பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். திருவாதிரைக்களி நடனம், மோகினி ஆட்டம் இதில் இடம்பெற்றது.
மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்திருந்த மாணவருடன், குழு புகைப்படம் எடுத்து மாணவர்கள் மகிழ்ந்தனர். மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
