எஸ்.என்.எஸ் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பார்மசி, பிசியோதெரபி, நர்சிங் வகுப்புகள் துவக்கவிழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தாளாளர் எஸ். ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் எஸ். நளின் விமல் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தூர் பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

இதில், எஸ்.என்.எஸ் பார்மசி மற்றும் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி முதல்வர் சதீஷ் குமார், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ராஜா செந்தில், செவிலியர் கல்லூரி முதல்வர் கவிதா, அலிட் ஹெல்த் சயின்ஸ் பேராசிரியை சுமதி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.  அதனை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டிற்கான சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டன.