டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வீரியம்பாளையம், கருப்பராயன்பாளையம், கைகோளபாளையம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா வீரியம்பாளையத்தில் நடைபெற்றது.
கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர் லோகேஸ்வரி பேசும்போது: மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் செயல்களில் தங்களை ஈடுபத்திக் கொள்ள வேண்டும். நாளைய இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மிகவும் அளப்பரியது. மாணவர்கள் தங்களது எண்ணங்கள், செயல்களை தீய வழியில் செலுத்தாமல் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கல்லூரியின் முதல்வர் சரவணன், 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னுசாமி வாழ்த்துரை வழங்கினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரபா, ஜெகதீஸ்வரி, சம்பத்குமார், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
