பாரதி விழாவைக் கொண்டாடும் பொருட்டு நிர்மலா மகளிர் கல்லூரி, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், வானொலி மாமணி கமலநாதன் அறக்கட்டளை இணைந்து முப்பெரும் விழா நடத்தியது. அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடைபெற்றது.

மேலும், பாரதியின் பாடல்கள் இளையோருக்காகப் பாடப்பட்டவை / நடுத்தர வயதினருக்காகப் பாடப்பட்டவை / சமுதாயத்திற்காகப் பாடப்பட்டவை எனும் தலைப்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அருட்சகோதரி மேரி பபியோலா, முதல்வர் குழந்தை தெரேஸ், செயலர் முன்னிலை வகித்தனர்.

நடுவராக பங்கேற்ற சிபி ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் அரங்க கோபால், பாரதியின் பாடல்கள் அனைத்துத் தரப்பினருக்காகவும் பாடப்பட்டவையே என தீர்ப்பு கூறினார்.