புதுதில்லியில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழா அணிவகுப்பில், கோவை நிர்மலா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவி அனாமிகா பங்கேற்றுள்ளார்.

குடியரசு தினவிழாவையொட்டி புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் மாணவி அனாமிகா குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் என்.எஸ்.எஸ் தன்னார்வலராக தேர்வு செய்யப்பட்டு கலந்துகொண்டார். 50 சிறந்த மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத்தலைவர் முன்னிலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

மாணவியை, கல்லூரியின் செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் பபியோலா, துணைமுதல்வர் ஜாக்குலின் மேரி பாராட்டினர்.