தி என். ஜி.பி பள்ளியின் ஆண்டுவிழா டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், டாக்டர் என். ஜி. பி கல்வி நிறுனவங்களின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, பள்ளியின் தாளாளர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, அறங்காவலர் டாக்டர் அருண் பழனிசாமி, கல்வி இயக்குநர் மதுரா பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று கல்வி மற்றும் இதர சிறப்பு பிரிவுகளில் சாதித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெகுவாக வெளிப்படுத்தினர்.