டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையின் சார்பில், தொழில் தொடங்குவதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘என்.ஜி.பி எக்ஸ்போ’ நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் சரவணன் விழாவைத் தொடங்கி வைத்தார். கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை தாங்கினார். 60க்கும் மேற்பட்ட வணிக ரீதியிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கான, வழிமுறைகள், சந்தைப்படுத்துவதற்கான உத்திகள், விற்பனைத் திறன்கள், வணிக நுட்பங்கள், சந்தைப் பகுப்பாய்வு, சந்தைப் போட்டித் திறன்கள், தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ளுதல், குழுவாக ஒருங்கிணைந்து செயலாற்றும் தன்மைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
நிகழ்வில் டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, அறங்காவலர்கள் மருத்துவர் அருண் பழனிசாமி, மதுரா பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், தலைமை இயக்க அதிகாரி டேசன், என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் இயக்குனர் முத்துசாமி, வணிக மற்றும் மேலாண்மைத் துறை புல முதன்மையர் பானுதேவி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
