தென்னிந்திய சமையல் கலை நிபுணர்கள் சங்கம் நடத்திய, சமையல் ஒலிம்பியாட் 2025 ஆசிய உணவு பிரிவு போட்டியில், டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், சமையல் அறிவியல் மற்றும் உணவக  மேலாண்மைத் துறை மாணவி அக்‌ஷிதா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ngp 7 scaled

இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அன்னபூர்ணா குழுமத்தின் கே.ஓ.வி.இ உணவக தலைமை சமையல் கலை நிபுணர் முருகேசன், மாணவிக்கு பயிற்சி அளித்த நிலையில், அவரை என்.ஜி.பி கல்விக் குழும செயலர் டாக்டர் தவமணி தேவி பழனிச்சாமி, கல்லூரி முதல்வர் சரவணன் கௌரவித்தனர்.