டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடல்சார் வணிகம் பற்றிய கருத்தரங்கம் நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக ஸ்விஃப்ட் கார்கோ பிரைவேட் லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மூத்த மேலாளர் லக்ஷ்மி சுப்ரமணியன், கிரீன்பிச்சு மெரிடியன் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் துறை மேலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய கடல் துறைமுகங்கள், உலக கடல் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து நிறுவனம், கடல்சார் ஒப்பந்தங்கள், கலன்கள், கடல் வழிகள் மற்றும் நீரிணைகள், கப்பல் போக்குவரத்து இடைத்தரகர்கள், கடல்சார் வணிகம் குறித்து விளக்கப்பட்டது.
என்.ஜி.பி கல்வி குழுமங்களின் இயக்குனர் முத்துசாமி, கல்லூரியின் முதல்வர் சரவணன், வணிகவியல் முனைவர் புல முதன்மையர் பானுதேவி, மாணவர்கள் கலந்துகொண்டனர்.
