டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக யு.ஏ.ஈ பிரில்லியன்ஸ் & லீடர்ஸ் குழும நிர்வாக இயக்குநர் ஹர்ஷத் கலந்துகொண்டு குடியரசு நாள் உரையாற்றினார். என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி நிகழ்விற்குத் தலைமையேற்றார்.

வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ஆங்கிலத்துறை, வணிகம் மற்றும் கணக்குப் பதிவியல் வரிவிதிப்புத் துறைசார்ந்த மாணவர்களுக்கான சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் பெண் தொழில்முனைவோர், தொழில்முனைவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.