கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு, கோவை வழியாக புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 8ம் தேதி காலை 8.30 மணிக்கு பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடக்க நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் நடக்கிறது.
இந்த ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 8:13 மணிக்கு சேலத்திலும், 9 மணிக்கு ஈரோட்டிலும், 9: 45 மணிக்கு திருப்பூரிலும், காலை 10:33 மணிக்கு கோவையில் நின்று செல்லும். பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
அதேபோல மறுமர்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும். மாலை 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலத்திலும் நின்று செல்லும்.
