ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறையில் புதிய ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டது. விழாவிற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர்  தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரிக்கும், கோவையில் உள்ள ஹிரோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மேக்ஸ்பைட் டெக்னாலஜிஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

srec 3

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி துறையின் கீழ் ஹிரோடெக் நிறுவனத்தின் உறுதுணையுடன் ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேசன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம, மேக்ஸ் பைட் நிறுவனத்தின் உறுதுணையுடன் இண்டஸ்ட்ரி 4.0 அண்ட் ட்ரான்ஸ்பர்மேஷன் ஆராய்ச்சி மையம் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது

விழாவில் ஹிரோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில், செயல்பாட்டு துணைத் தலைவர் செந்தில் குமார், மனித வள பொது மேலாளர் கவிதா மற்றும் மூத்த மேலாளர் வசந்த குமார், மேக்ஸ்பைட் டெக்னாலஜிஸ் சார்பில் சுரேந்திரன் தேவராஜ், தலைமை வணிக அதிகாரி வினோத், கிப்ட் செல்வின், தனசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறை தலைவர் முருகராஜன், பேராசிரியர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

srec2 scaled