எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு ஆய்வகம் திறக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக அராகிரியேட் இந்தியாவின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான நவநீதன் கந்தராஜ் கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
இந்த புதிய ஆய்வகம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தி, அதிநவீன தொழில்நுட்பத்தில் அனுபவத்தை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு உதவுவதன் மூலம், ஆய்வகம் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தயார்ப்படுத்துகிறது.