கோவை, காளப்பட்டியில் மிடாஸ்டச் “சிசுவாடிகா” புதிய மழலையர் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியப் பாரம்பரிய கற்பித்தல் முறைகளை நவீன ஆரம்பக் கல்வி நடைமுறைகளுடன் இணைத்து குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது இந்த கல்வித்திட்டம். நிகழ்ச்சியில் நபார்ட் வங்கியின் முன்னாள் இயக்குநர் இராம ஸ்ரீனிவாசன், பள்ளியின் தாளாளர் ஷர்மிளா ராம் ஆனந்த், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.