நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 7ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை திருநெல்வேலியிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06030), மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
அதேபோல் மறுமர்க்கத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் 8ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06029), மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.
