கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் நிலையான வளர்ச்சிக்கான புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது .

இந்நிகழ்வில், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உட்பட 1,050 பங்கேற்பாளர்கள் ஒன்று கூடி, நிலைத்தன்மையில் புதுமைகளைப் பற்றி விவாதித்தனர்.

நேரு தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் சிவராஜா வரவேற்புரையாற்றினார். மேலும், ஐ.சி.என்.ஜி.டி.எஸ். அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ், ஐ.சி.என்.ஜி.டி.எஸ். நேரு குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார்,  மலேசியாவின் சைன்ஸ் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுந்தரேசன் பெருமாள், மலேசியாவின் மாரா பல்கலைக்கழக தொழில்நுட்பத்தில் உள்ள ஸ்மார்ட் உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ரெங்கா ராவ் கிருஷ்ணமூர்த்தி, நேரு கல்வி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் நாகராஜா, நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் மணியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

11 1

இந்த மாநாட்டில் நிலையான வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு, மின்சாரம் மற்றும் மின்னணு கண்டுபிடிப்புகள், ரோபாட்டிக்ஸ், தொடர்பு, வெப்பம் மற்றும் திரவங்கள், கட்டமைப்பு மற்றும் சிவில் பொறியியல், விவசாயம் மற்றும் உணவு தொழில்நுட்பம், சுகாதாரம், நவீன அறிவியல், மனிதநேயம் மற்றும் நிலையான மேலாண்மை நடைமுறைகள் உள்ளிட்ட பல துறைகளில் விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக, நேரு கட்டிடக்கலை பள்ளியின் இயக்குனர் அம்ருதாவின் நன்றியுரையாற்றினார்.