கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் வணிகவியல் துறை இணைந்து ‘வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பண்டைய தமிழர்களின் கடல்சார் வணிகம் மற்றும் கலாச்சார வெளிப்பாடுகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தினை நடத்தியது.
இதில் சென்னை பச்சையப்பா கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, உதவிப் பேராசிரியர் சரவணன் கடல்சார் வணிக வலையமைப்பும் வெளிநாட்டு தொடர்புகளும் என்ற தலைப்பிலும்,
ராணிப்பேட்டை மாவட்டம் சி அப்துல் ஹக்கீம் கல்லூரி வரலாற்றுத் துறை முதுகலை மற்றும் ஆய்வியல்துறை உதவிப்பேராசிரியர் குமரன் கடல்சார் வணிகத்தின் பண்பாட்டு தாக்கம் என்ற தலைப்பிலும்,
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான நாகேஸ்வரி வரலாற்றுத் தொடர்ச்சியும் பூர்வீக வணிக முறைகளும் என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர்.
தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) தலைவர் ராஜலட்சுமி, வணிகவியல் துறையின் தலைவர் உமா, வணிகவியல் புல ஒருங்கிணைப்பாளர் குமார், இணைப் பேராசிரியர் உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
