கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கல்லூரிகளுக்கிடையேயான இயற்பியல் அறிவியல் கூட்டம் நடைபெற்றது.
தலைமை விருந்தினராக இயற்பியல் துறையின் முன்னாள் மாணவரும், attrACT லைப் & ஹெல்த் இன் ஜெனரல் மற்றும் கார்ப்ரேட் குரு லீடெர்ஷிப் ஃபேக்டரி நிறுவனங்களின் இயக்குநருமான காயத்ரிநாதன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இளங்கலை மாணவர்களுக்கான போட்டிகளில் இயற்பியல் வினாடி-வினா, டிஜிட்டல் போஸ்டர் வடிவமைப்பு, நினைவாற்றல் சோதனை, மின்னணு செய்முறை, இயற்பியல் டம்ப்-சி, இயற்பியல் ரங்கோலி, புகைப்படப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
முதுகலை மாணவர்களுக்காக மேம்பட்ட வினாடி-வினா, ஆய்வுக் கட்டுரை விளக்கக்காட்சி, இயற்பியல் மாதிரி வடிவமைப்பு மற்றும் சிறந்த ஆராய்ச்சி விளக்குபவர் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளின் மொத்த சாம்பியன் பட்டத்தை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும், இரண்டாமிடத்தை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், மூன்றாமிடத்தை உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விஸாலாட்சி மகளிர் கல்லூரியும் பெற்றது. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
