கோவையில் 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘கோவை 2026’ எனும் இசை நிகழ்ச்சி புரோசோன் வணிக வளாகத்தில் வரும் 31ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.

ஸ்டெல்லர் எக்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் இணைந்து நடத்த உள்ள இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை (13.12.2025) நடைபெற்றது.

இதில் ஸ்டெல்லர் எக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹர்ஷினி மகேந்திரன், மற்றும் அவரது குழுவினர் ஸ்ரீராம், அருண், நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பிரபல பாடகர் கிரீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய பாடகர் கிரிஷ், கோவையில் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சிகளை ரசிக்க ரசிகர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர், வரும் புத்தாண்டில் புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள நம்ம கோவை நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டு பாட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சி தம்முடன் இணைந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் நட்சத்திர பாடகர்களும் பாட உள்ளதாக தெரிவித்தார்.

இதில் பிரபல திரைப்படங்களில் தாம் பாடிய பெரும்பாலான ஹிட் பாடல்களை பாட உள்ளதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்புக்கென அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள், நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கி உள்ளதாகவும், டிக்கெட்டிகளை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.