ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிக வைபவ் என்னும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது.
மாணவிகளுக்குத் தொழில்துறையின் உற்பத்தி, விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் பயிற்சியளித்து, அவர்களுக்கான விற்பனை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் சித்ரா, சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவர் மீனா சாமிநாதன்,ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் முன்னாள், இந்நாள் மாணவிகள் இணைந்து ஆடை, அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், உணவு மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் எனப் பலவகையான விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர். நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.