ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் மற்றும் ஏரியல் பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் பின்ஹாசவ் கையெழுத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டுக் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், சைபர் பாதுகாப்பு, சுகாதார அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கிடையில், இஸ்ரேல் ப்ரோமிட்டாய் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள சைபர் செக்யூரிட்டி, ஸ்மார்ட் ஃபேக்டரி இண்டஸ்ட்ரி 4.0, எலக்ட்ரிக்கல் மொபிலிட்டி போன்ற ஆராய்ச்சி மையங்களை குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை துணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், கல்வித்துறை இயக்குநர் என்.ஆர். அலமேலு, பொறியியல் கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன், மற்றும் ஏரியல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அமித், நாடியா, ப்ரோமிட்டாய் நிறுவனத்தின் லேமுவேல் மேலமேட், மார்க் மேலமேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
