ரமலான் மாதத்தின் புனித நோன்புகளை நிறைவு செய்த கோவையை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை கரும்புக்கடை, இஸ்லாமியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்றனர்.
ஆண்கள் 7000+, பெண்கள் 5000+, மற்றும் குழந்தைகள் 4000+ என மொத்தம் 15000க்கும் பேர் உலக அமைதிக்காகவும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் விரைவில் முடிவடையவேண்டும் எனவும் பிராத்தனை மேற்கொண்டனர்.
தொழுகைக்கு முந்தைய நாளே அதில் பங்கேற்க வரவுள்ள அனைவரும் ரமலான் திருநாளில் ஏழைகள் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களின் நலன் கருதி அவர்களுடைய வீட்டுக்கு சென்று இலவசமாக அரிசி போன்ற உணவை வழங்கி இருப்பதாகவும், ரமலான் பண்டிகையின் போது அவர்களுக்கு பிரியாணி வழங்குவதையும் வழக்கமாக பின்பற்றுவதாக இன்றைய தொழுகையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
