கோவை, காந்திபுரத்தில் கட்டப்பட்டுவரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை (30.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.