ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெஸ்ட் இன்ஜினியர்ஸ் பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதன்மூலம் மாணவர்களுக்கு இந்நிறுவனத்தில் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் கல்லூரி ஆசிரியர்கள் இந்நிறுவனத்துடன் ஒன்றிணைந்து தொழில்நுட்ப ஆலோசனைகளை  மேற்கொள்வது, கல்லூரி வளாகத்திற்குள் திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதுடன், அதன்மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் அடங்கும்.

 

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன்  மற்றும் பெஸ்ட் இன்ஜினியர்ஸ் பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீப்ரியா கௌரிசங்கர் ஆகியோர்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் வினு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர் மோகன்குமார், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் நிரஞ்சனாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.