ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆரக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ், கணினி அறிவியல் துறை டீன் அருண்குமார், ஆரக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நாகரத்தினம் நிகழ்வில் பங்கேற்றனர்.

மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி, கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஆரக்கிள் ஜாவா ஃபவுன்டேசன் பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.