தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் “தனியார் வேலை வாய்ப்பு முகாம்” வரும் ஜனவரி 24 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வானது கோவை, நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் 70க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளது. இதில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐஐடி படித்தவர்கள் பங்கேற்கலாம். முன் அனுபவம் இல்லாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணங்கள் எதுவும் இல்லை. ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஜனவரி 22ஆம் தேதி அன்று கீழ்கண்ட அலைபேசியிலோ அல்லது மின்னஞ்சலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
96296 44460, 78457 33567, 75488 78810 & 75400 73831.or santhosh [email protected]
