நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, நாட்டு நல பணி திட்டம்,  பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி இந்திய மருத்துவ கழகம் மற்றும் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மெகா ரத்ததான முகாமை நடத்தின.

நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மையத்தில் நடைபெற்ற முகாமில் 160 யூனிட் ரத்தம் மாணவர்களிடமிருந்து  தானமாக பெறப்பட்டது. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் முதல்வர் செந்தில்குமார், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். இதில், அரசு செவிலியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.