கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த யக்க்ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 25) கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உலகப் புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் மீனாட்சி ஸ்ரீனிவாசனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டாக்டர் சுந்தரராமன், டாக்டர் வினு அறம் மற்றும் டாக்டர் தரணிபதி ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், பத்ம பூஷன் விருது பெற்ற திருமதி அலமேலு வள்ளி மாணவியான மீனாட்சி ஸ்ரீனிவாசனின் பரதநாட்டியம் மூலம் அரங்கை கவர்ந்தார். இவருடன் வேதகிருஷ்ணராம், ஜெயஸ்ரீ, ஹரிபிரசாத் உள்ளிட்ட கலைஞர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த மூன்று நாள் திருவிழா, பாரதத்தின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. ஈஷா யோகா மையம் ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவை நடத்தி, பாரத கலாச்சாரத்தின் பாரம்பரிய கலை வடிவங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நிகழ்வின் இறுதி நாளில், மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் இன்று (பிப்ரவரி 26 )மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் நடைபெற உள்ளன. இசை, நடனம், சத்குருவுடன் அருளுரை மற்றும் சக்திவாய்ந்த தியானங்கள் இடம்பெறும். இந்த நிகழ்ச்சிகள் ஈஷா யோகா மையத்தின் சூர்ய குண்ட மண்டபத்தில் நடைபெறும்.