ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் 137ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை உரையாற்றினார். கோவை எல்டிஐ மைன்ட்டிரி டேடா அனலடிக்ஸ் இயக்குநர் ஐஸ்வர்யா நந்தகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கணித நுண்ணறிவு தொடர்பான பல்வேறு போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 60ற்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவியர்க்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.