கோவை சுந்தராபுரத்தில், குருகுலம் இன்டர்நேசனல் இன்ஸ்டிடியூட் சார்பில் 6ம் ஆண்டு ‘மதிநிறை மார்கழி 2026’ என்ற இசை, நாட்டியத் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் மயிலிறகு சுந்தரராஜன் தலைமையுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக டிலைட் நிறுவனங்களின் இயக்குனர் குரு தங்கவேல், அபிராமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பெரியசாமி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியத் துறையில் சேவையாற்றும் சிவாஸ் டான்ஸ் அகடெமி இயக்குநர் மீனா சிவக்குமார், ஸ்ரீ ராதா மாதவ் நாட்டியப்பள்ளி இயக்குநர் பிரசன்னா ஹரிஹரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட நாட்டியப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நாட்டியமாடினர்.

