எஸ்.என்.எஸ் பி-ஸ்பைன் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கான ‘பிரிஸ்மாடிகா 25’ மேலாண்மை விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் வினாடி வினா, வணிகத் திட்டப் போட்டி, தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
பான் இந்தியா அளவில் நடைபெற்ற இப்போட்டிகள், பங்கேற்பாளர்களை பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக, ஆஃப்லைன் நிகழ்வுகளில் கோவை மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் குளோபல் முன்னாள் மாணவர் மற்றும் ஏஐ-அடிப்படையிலான செமி-கண்டக்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் சுரேஷ் குப்புசாமி, டிசிஎஸ்-ன் திட்ட மேலாளர் தரணி குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுடன் ஆலோசனை பரிமாறினர்.
இதில், எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன், எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், எஸ்.என்.எஸ் பி-ஸ்பைன் இயக்குநர் பாமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.