பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “நிலையான உலகத்திற்கான செயல்பாட்டுப் பொருட்கள் மற்றும் பசுமைப் பொருட்களில் வளர்ந்து வரும் போக்குகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

mahalingam

கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி தலைமையுரையாற்றினார். மிடாலண்ட் அக்விசிஷனின் துணைத் தலைவர் ரஷ்மி ரஞ்சன் துவக்க உரையில், மாணவர்களை பொறுப்புள்ள நிறுவன பணியாளர்களாக உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. செயற்கை நுண்ணறிவு எதிர்கால தொழில்துறையின் முக்கிய தளம் ஆக இருக்கும் என அறிவுறுத்தினார்.

mahalingam 2

பிரை இன்ஃபோடெக் லிமிடெட்டின், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோகுல் சிறப்பு உரையில், அடிப்படை பொறியியல் துறைகளில் தொடர்ச்சியான மேம்பாடு அவசியம். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்க மாணவர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறினார்.