கோவை ஆனைக்கட்டி சாலையில், மாங்கரை அடுத்த மலை பாதையில் அமைந்துள்ள, ஸ்ரீ மாதேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், அப்பகுதியில் வசிப்போர், விவசாயிகள், மலை பாதை வழியாக பயணிப்பவர்கள் என பலரும் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதியில் விவசாயம் செய்யும் புவனேஸ்வரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சிவனுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபட்டோம்.
வனத்தை ஒட்டிய பகுதியில் கோவில் அமைந்துள்ளதனால் பெரிய விசேசமாக நாங்கள் வழிபட்டு வருகிறோம். இங்கு விவசாயம் செய்வோர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மலைப்பாதைகளில் பயணிப்போர் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான முரண்பாடுகள் இன்றி வனத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்க வேண்டும் என வழிபாடு நடத்தியதாக தெரிவித்தார்.
