திமுக சார்பில் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார். இதில் ‘பெரியார் விருது’, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, ‘கலைஞர் விருது’ மூத்த முன்னோடி சோ.மா. ராமச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத்தலைவருமான பொங்கலூர் நா. பழனிசாமிக்கு, ‘மு.க.ஸ்டாலின் விருது’ வழங்கப்பட்டது. இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருது தொகை தலா ரூ. 3 லட்சத்தினை திமுக வளர்ச்சி நிதிக்காக விழா மேடையிலேயே வழங்கினர்.
