பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில், ஆசிரியர்கள் தின விழாவை முன்னிட்டு கோவை மண்டல பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.
ஆசிரியர்கள் தின விழா குழு மாவட்டத் தலைவர் ஸ்ரீராம் பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் வல்பூர் சாமி, ஜி.எஸ்.டி.ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டம் அமைப்பின் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர்.
சிறப்பு விருந்தினராக 3242 சி மாவட்ட ஆளுனர் ராஜசேகர் கலந்துகொண்டு ஆசிரியர்கள் தின விழாவை துவக்கி வைத்தார். தலைமை விருந்தினராக அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டம், முதல் துணை ஆளுனர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுனர் சூரி நந்தகோபால், முன்னாள் ஆளுனர்கள் டாக்டர் பழனிசாமி, ராம்குமார், கருணாநிதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
