குடியரசு தின விழாவை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி, பொள்ளாச்சி லயன்ஸ் சங்கம் மற்றும் ஈரோடு ஜீவன் ஜோதி ட்ரஸ்ட் இணைந்து, கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கை கால் மற்றும் கை வழங்கும் நிகழ்வு என்.ஜி.எம் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர் ராஜசேகர் தலைமையில், பொள்ளாச்சி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் நாகராஜ் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மாவட்ட ஆளுநருமான பழனிசாமி, முதல் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச செயற்கை கால், கைகள் வழங்கினர்.
