நன்னெறிக் கழகம் கோவை சார்பில், 69வது ஆண்டு நன்னெறிச் செம்மல் விருது வழங்கும் விழா, ரேஸ்கோர்ஸ் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் ஞாயிறு அன்று நடைபெற்றது.

விழாவிற்கு ஏ.வி குழுமங்களின் தலைவர் ஏ.வி.வரதராஜன் தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் இயகோகா சுப்பிரமணியம், கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

மகாத்மா காந்தியின் நெறிகள், விவேகானந்தரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்காக, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயருக்கு, ‘நன்னெறிச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

இதில் நன்னெறிக் கழகத் தலைவர் பத்மநாபன், துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் ஜெயச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.