பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “நிலையான தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட பொருட்கள்” என்ற தலைப்பில் இருநாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

கல்லூரி செயலர் யசோதா தேவி வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் நாகராஜன், நிலையான மின்னணு தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார். தொடர்ந்து மாநாட்டு நினைவுச் சுவடினை வெளியிட்டார்.

புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று, தொழில்நுட்ப அமர்வுகளில் தங்களது ஆராய்ச்சி அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்தனர். மாநாட்டில் மேம்பட்ட பொருட்கள், ஆற்றல் சேமிப்பு, நானோ மருத்துவம், செயற்கை நுண்ணறிவுடன் பொருள் அறிவியல் போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 250 பேர் பங்கேற்றனர்.