பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆடைக் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஹாரத்தி வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் குளோபல் பிசினஸ் டெவலப்மென்ட் தலைவர் ஸ்ரீ முருகன் தென்கொண்டார் கலந்து கொண்டார்.

150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆடைகளுக்கேற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்களுடன் ரேம்ப் வாக்கில் மாணவிகள் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவில், தலைமை விருந்தினராக தமிழ்நாடு கைவினை மன்றத் தலைவர் ரூபா மோகன்தாஸ் கலந்து கொண்டு மாணவிகளின் படைப்பாற்றலைப் பாராட்டினார். நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக தி நெசவு கோயம்புத்தூரின் நிறுவனர் உமா பாலாஜி கலந்துகொண்டார். வெற்றியாளர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

